அருப்புக்கோட்டை, செப்.12: தேனீ வளர்ப்பு குறித்து ஏழு நாட்கள் இலவச பயிற்சி வரும் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் வெற்றி கண்ட தொழில் முனைவோர் உரையாற்றவுள்ளனர். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். முதலில் வரும் 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9488448760 மற்றும் 9626819600. விவரங்களுக்கு கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.