திருவாடானை, ஆக.22: திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் தேவாலயம் உள்ளது. இந்த கிறிஸ்தவ தேவாலய கோபுரத்தில் கடந்த சில தினங்களாக விஷ தேனீக்கள் கூடு கட்டியதோடு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) கருப்பையா தலைமையிலான வீரர்கள் தேனீக்களை தீ வைத்து எரித்து அழித்து விட்டனர்.
தேனீக்கள் தீ வைத்து அழிப்பு
previous post