கெங்கவல்லி, ஆக.18: கெங்கவல்லி அருகே தகரப்புதூர் ஊராட்சி, கூடமலை-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் சதீஷ்குமார் என்பவர் வீட்டின் அருகில் பனைமரம் உள்ளது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது. இவை அவ்வழியாக வந்த பொதுமக்களை தேனீக்கள் கொட்டியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து சதீஷ்குமார் என்பவர் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு அலுவலர் (பொ) அசோகன் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து தேன் கூட்டை அழித்தனர்.