தேனி: தேனி லைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி இயக்குநர் மேனகா தலைமை வகித்தார். பள்ளி இயக்குநர் அஜய்துர்க்கேஸ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நிலோபர்பியா வரவேற்றார். இவ்விழாவில் தேனி போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் நடனம், பேச்சு, கவிதை, இசை மற்றும் காந்தி, நேரு, பாரதியார், சுபாஷ்சந்திரபோஸ் போன்ற தேசத் தலைவர்களின் உருவங்களில் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள் ஜனனி, தேன்மொழி, தனலட்சுமி, கவிதா, பிருந்தா, சோபனா, பாண்டிசெல்வி, நிவேதா, தனலட்சுமிபிரியா, சோபியா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.