கூடலூர்: தேனி மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உறுதியளித்துள்ளார். பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
‘‘தேனி மாவட்டத்தில் குறிப்பாக உத்தமபாளையம் வட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரை,நீர் வழித்தடங்கள் மற்றும் ஓடைகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து, நீர்த்தேக்கம் தடுக்கப்படுவதோடு விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. மேலும், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர். எனவே இதன் பேரில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றப்படும்’’ என்றார்.