Tuesday, February 27, 2024
Home » தேனி, பழனிசெட்டிபட்டியில் பாலிதீன் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.6000 அபராதம்

தேனி, பழனிசெட்டிபட்டியில் பாலிதீன் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.6000 அபராதம்

by Ranjith

 

தேனி, ஜன. 28: தேனி மற்றும் பழனிசெட்டிபட்டியில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் பாலிதீன் பை பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.6000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தேனி நகர் மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் புதிய, பழைய பஸ் நிலையப் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் தலைமையில் போலீசாரால் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பாலிதீன் பயன்பாடு தொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 14க்கும் மேற்பட்ட கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பழைய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் கெட்டுப் போன 5 கிலோ அளவிலான ஸ்வீட்ஸ் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும் கடை சீலிடப்படும் என அறிவுறுத்தினர்.

You may also like

Leave a Comment

20 − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi