தேனி, அக்.27: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை,அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கணிதத் துறை இளங்கலை மாணவர்களுக்கான கணித பயிற்சி மற்றும் திறமை தேடல் திட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், இணை செயலாளர்கள் அருண், செண்பகராஜன் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களை கணினித் துறை தலைவர் சோனியா வரவேற்று பேசினார். இதில் கல்லூரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலாசங்கர், சரண்யா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் காசிபிரபு, பேராசிரியை பாண்டியம்மாள், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் செங்கதிர், பேராசிரியை சோலலட்சுமி, வேலூர் தொழிற்நுட்ப நிறுவன உதவி பேராசிரியர் திவ்யா ஆகியோர் பேசினர். முடிவில் பேராசிரியை பிரியங்கா நன்றி கூறினார்.