தேனி, மே 27: பெரியாறு வைகை பாசன வடிநில கோட்டத்திற்குட்பட்ட தாடிச்சேரி கண்மாய்க்கும், புதுச்சேரி கண்மாய்க்கும் இடையே உள்ள உபரிநீர் வாய்க்காலை சிறப்பு துர்வாரும் பணியில் 4.2 கிமீ தூரத்திற்கு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தின், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கோவிந்தராவ் தாடிச்சேரி மற்றும் புதுச்சேரி கண்மாய்க்கான சிறப்பு தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத்பீடன், உதவி செயற்பொறியாளர் மயில்வாகணன், பெரியாறு வைகை வடிநில கோட்ட உதவி பொறியாளர் பிரவீன்குமார் உடனிருந்தனர்.