தேனி, அக். 4: தேனியில் உள்ள அரசினர் ஐடிஐயில் முதலாமாண்டு பயிலும் பயிற்சியாளர்களுக்கு நோக்கு நிலை எனப்படும் ஓரியண்டேசன் வகுப்பு நடந்தது. இவ்வகுப்புகள் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இப்பயிற்சி முகாமை ஐடிஐ முதல்வர் சேகரன் தொடங்கி வைத்தார். பயிற்சி அலுவலர் சிவகுஞ்சு வரவேற்று பேசினார். ஐஎம்சி சேர்மன் டாக்டர்.அரவிந்த் மற்றும் தேனி போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன், தேனி தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பயிற்சி அலுவலர்கள், அனைத்து பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மருதுபாண்டியன் ஒருங்கிணைத்தார். உதவி பயிற்சி அலுவலர் உடையாளி நன்றி கூறினார்.