தேனி, ஜூன் 18: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள தகவலில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள், 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள், நர்சிங் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 7904706709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.