தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற 17ம் தேதி காலை 11 மணியளவில் தேனியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, அந்தந்த வட்டாரத்தல் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து அடுத்து நடக்கும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.