தேனி, ஆக. 5: தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கிலோ ரூ.500 லிருந்து ரூ.350 ஆக சரிந்தது. தேனி நகர் பழைய பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்குள்ள பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பூ வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களும் இந்த பூ மார்க்கெட்டிற்கு வந்து உதிரி பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.
இந்த பூ மார்க்கெட்டிற்கு சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, வயல்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூ விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த இருநாட்களுக்கு முன்பாக தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500க்கு விற்பனையானது. ஆனால் நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.350 ஆக சரிந்தது. இதனால் பொதுமக்கள் பூக்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.