தேனி, ஆக.15: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
எனவே, வேலை நாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.