தேனி, ஜூன் 5: தேனி மாவட்டத்தில், பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள்(வன உரிமை அங்கீகரித்தல்) வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துதல் சம்பந்தமாக வருகிற 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் அனைத்து பழங்குடியின குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதன்படி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், ராஜக்காள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல்புரம், போடி ஊராட்சி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்குட்பட்ட அலங்காரம், அண்ணாநகர், சொக்கனலை, பட்டூர், கரும்பாறை, குறவன்வழி, கொத்தமல்லிகாடு, கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட முட்டம், முதுவார்குடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலப்புரவு, சோலையூர், சிறைக்காடு, க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்குட்பட்ட நொச்சிஓடை, முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தாழையூத்து, உப்புத்துறை, கடலைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். எனவே, இக்கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
தேனியில் கிராம சபைக் கூட்டம்
0