தேனி, நவ.27: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமாதவன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, குற்றவியல் அலுவலக மேலாளர் பிரதீபா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல தேனி மற்றும்அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.