Monday, February 26, 2024
Home » தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வரும் 21 ம் தேதி வினாடி வினா போட்டி முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வரும் 21 ம் தேதி வினாடி வினா போட்டி முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

by Ranjith

 

தஞ்சாவூர், ஜன.19: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 21ம் தேதி நடைபெறவுள்ள வினாடி,வினா போட்டிக்கு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள்படி, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எவிஇஇபி திட்டத்தின்படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி 21ம் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 11.00 முதல் 11.15 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். https://www.erolls.tn.gov.in/Quiz2024. இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் இன்று வரை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். \”இந்தியாவில் தேர்தல்கள்\” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளத்திலும் மற்றும் உதவி எண் 1800-4252-1950, 1950 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi