செங்கம், ஏப்.11: செங்கம் நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் திடீரென இறக்கி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கன்டெய்னர் ஒன்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு காணப்படும் இந்த கன்டெய்னரில் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு, அவரது உரிமை என ஸ்டிக்கர் ஒட்டி, கன்டெய்னர் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த தகவலும் அதில் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் கன்டெய்னரை பார்வையிட்டு யாருடையது, எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நெடுஞ்சாலையோரம் இதுபோன்று கேட்பாரின்றி இறக்கி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையோரம் கேட்பாரற்ற கன்டெய்னர் அதிகாரிகள் விசாரணை செங்கம் நகரில்
90