கிருஷ்ணகிரி, ஆக.20: பர்கூர் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பிரமிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தேசிய தர நிர்ணய குழுவினர், இன்று (20ம் தேதி) மற்றும் நாளை(21ம் தேதி) வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் தலைவராக விஜயநகர கிருஷ்ணதேவராய பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரிர் சித்து பி.அல்குர், ஒருங்கிணைப்பாளராக நகர் கண்டர்பா காஷ்மீர் சென்ட்ரல் பல்கலைக்ழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பர்வின் அக்தர் பண்டிட் மற்றும் ஆந்திர பிரதேசம் காகுளம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கனிதி ராமுலு ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு செய்ய இன்று வருகை
previous post