தேங்காயிலுள்ள ஆரோக்கிய குணத்தை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்.* ஞாபக சக்திக்கு… புத்திசாலியாக இருக்க ஞாபக சக்தி அவசியம். ஞாபக சக்திக்கு மாங்கனீஸ் சத்து அவசியம். அதை அதிகரிக்க தேங்காய்ப் பருப்பு, வேர்க்கடலையை அவ்வப்போது சாப்பிட்டால் போதும்.* மூலப் பிரச்னைக்கு… தேங்காய்ப் பாலில் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம், கண் எரிச்சல், மூலச்சூடு பிரச்னைகள் நீங்கும்.* வாய்ப்புண் குணமாக… காலையில் சாப்பாட்டுக்கு முன் தேங்காய்ப் பால் சிறிது பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.* நரம்புத் தளர்ச்சிக்கு… ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி கொண்டது. எலும்பு வளர்ச்சியைத் தூண்டும். நரம்புத் தளர்ச்சி பாதிப்புகளை நீக்கும்.* கொழுப்பைக் குறைக்கும்…; தேங்காயை அப்படியே சாப்பிடுவது நல்லது. கொழுப்பு குறையும். தேங்காயை சட்னியாக அரைத்து அல்லது வேறு வகையில் சமையலில் சேர்க்கும் போது அதில் கொழுப்பு அதிகரிக்கும்.
தேங்காய் மகிமை!
60
previous post