Wednesday, May 31, 2023
Home » தேங்காய் உடைத்தலில் இருக்கும் சகுண ரகசியங்கள் பற்றி தெரியுமா?

தேங்காய் உடைத்தலில் இருக்கும் சகுண ரகசியங்கள் பற்றி தெரியுமா?

by kannappan
Published: Last Updated on

காலம் காலமாக சில நம்பிக்கைகள் கடைபிடிக்கபட்டு வருகிறது. சகுண சாஸ்திரமும் இதில் அடங்கும். ஒரு சில குறிப்புகள் மூலம் நம்மால் நடக்கவிருப்பது நன்மைக்கா? தீமைக்கா? எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்குமா? வெற்றி கிட்டுமா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும். உதாரணமாக கோவிலில் பூ போட்டு பார்ப்பது.. அந்த பூவின் நிறத்தை வைத்தே சகுனம் பார்த்து விடுவோம். அது போல் தான் மகத்துவம் வாய்ந்த தேங்காயை உடைக்கும் போது ஏற்படும் சில விஷயங்களை வைத்தே சகுண பலன்களை சொல்லி விடலாம் என்று நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர். அதை பற்றிய விரிவான தகவல்கள் இதோ.பொதுவாக தேங்காய் தெய்வாம்சம் பொருந்திய ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. முக்கண் கொண்டதால் ஈசனின் ரூபமாக விளங்கிறது. பிள்ளையாருக்கு இஷ்ட பொருளாக இருப்பது இந்த தேங்காய் தான். எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன் தேங்காய் உடைத்து விட்டு தொடங்கினால் இறையருள் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.நீங்கள் புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்கள் அல்லது திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறீர்கள் இது போன்ற நல்ல காரியங்களை செய்யும் முன் அதிகாலை நீராடி கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து ஆசி பெற்று ஒரு நல்ல தேங்காயை வாங்கி உடைத்து பாருங்கள். நீங்கள் உடைக்கும் தேங்காய் சரி சமமாக வட்டமாக உடைந்தால் நன்மையை தரும். இறையருள் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடையின்றி வெற்றி அடைந்து விடும். கவலையை விடுத்து மகிழ்ச்சியாக ஆரம்பிக்கலாம்.நீங்கள் உடைக்கும் தேங்காயானது சரி சமமாக உடைந்து அதன் ஒரு பகுதியில் ஒரு சிறிய துண்டு தேங்காய் பிளந்து மறு பகுதியில் வந்து விழுந்தால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் லாபகரமாக அமையும். நீங்கள் செய்ய இருக்கும் நல்ல காரியங்கள் எந்த தடங்களும் இன்றி தாமதமில்லாமல் விரைந்து முடியும் என்று அர்த்தமாகும்.அதே போல் நீங்கள் உடைக்கும் தேங்காய் சரி சமமாக உடைந்து அதன் ஒரு முடியில் ஒரு சிறிய துண்டு பிளந்து அந்த முடியின் உள்ளேயே வந்து விழுமாயின் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். செல்வம் சேரும், பணவரவு உண்டாகும் என்று பொருள்படுமாம்.தேங்காய் உடைக்கும் போது மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதாசார அடிப்படையில் உடைந்து விட்டால் அது சுப சகுணமாகவே கருதபடுகிறது. என்னடா இது சரி சமமாக உடையாமல் இப்படி உடைந்து விட்டதே என்று கலக்கம் கொள்ளத் தேவையில்லை. இதுவும் நல்ல பலன்களையே தரவல்லது.மேலும் தேங்காய் முடி கொண்ட பகுதி சிறியதாகவும் பின் பகுதி பெரியதாகவும் உடைந்தால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகுமாம். இதுவும் மிகப்பெரிய பலன்களை வழங்கும் சகுணமே ஆகும். லக்ஷ்மி தாயின் அருள் இருந்தால் எந்த குறையும் ஏற்படாது. அனைத்தும் சுபமாக முடியும்.இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய் ஒரு வேளை ஒரு பகுதி சரியாகவும் இன்னொரு பகுதி கூறுபட்டும் உடைந்து விட்டால் சங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் உண்டாகக்கூடும். எடுக்கும் முயற்சியில் தடங்கள் ஏற்படும். தாமதமாக நடக்க கூடிய வகையில் சில பிரச்சனைகள் உருவாகலாம்.தேங்காயின் முக்கண் அழுகி இருந்தால் கெட்ட தகவல்கள் வந்து சேரலாம். எடுக்கும் முயற்சிகளை தள்ளி வைத்து கொள்வது நல்லது. அன்றைய நாளில் அந்த காரியத்தை தொடங்காமல் இருப்பதே நல்லது. வேறொரு நல்ல நாளில் வைத்து கொள்ளுங்கள் தவறில்லை.சகுணதிற்காக இவ்வாறு உடைக்கபடும் தேங்காய் சிதறுகாய் போல பல பகுதிகளாக உடைந்து விட்டால் இதுவும் நல்லதுக்கு அல்ல. வீண் விரயங்களை ஏற்படுத்திவிடும். பல தடங்கல்கள் உண்டு பண்ணி பிரச்சனைகளை உருவாக்கி விடும். எடுக்கும் காரியங்களில் தாமதம் ஏற்பட்டு அதனால் விரயங்கள் அதிகரித்துவிட செய்யும்.இப்படி கெடுதல் ஏற்படுத்தும் சகுண பலன்கள் தரும்படி உங்கள் தேங்காய் உடையும் பட்சத்தில் அதற்குரிய பரிகாரம் செய்து விட்டு பின்னர் நல்ல கரியங்களில் ஈடுபடலாம். உடனே வேறு ஒரு தேங்காய் வாங்கி அதை பிள்ளையாருக்கு சிதறுகாய் போல உடைத்து விட்டு மனதார வேண்டிக் கொண்டால் போதும். கெட்ட பாதிப்புகளில் இருந்து நீங்கி நன்மையை அடையலாம்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi