ஓசூர், நவ.27: தெலுகு சமாக்யா தேசிய அளவிலான பொதுக்குழு கூட்டம், வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம்தேதி ஆகிய இரு நாட்கள் மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிரடியில் நடைபெற உள்ளது. ஓசூரில் இருந்து இக்கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பாக, காமராஜ் காலனியில் உள்ள ஆந்திரா சாம்ஸ்க்ருதிகா சமிதியில் ஆர்டிஎஸ் ஜோனல் பைல்ஸ் சேர்மன் கிருஷ்ணப்பா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆர்டிஎஸ் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளருமான சீதாராமய்யா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கட்டாய தமிழ் கல்வி சட்டம் 2006 என்ற சட்டத்தின் மூலம், தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியினரான தெலுங்கு, கன்னட, மலையாளம் மொழியினர் தாய்மொழியில் படிக்க முடியாததால், சில தெலுங்கு சங்கங்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிறுபான்மை மொழியினருக்கு அவரவர் தாய் மொழியில் கல்வி வழங்குவது அரசின் கடமை என்றும், மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் படிக்க கோருவது அவர்களின் உரிமை என்றும் கூறியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தக்கோரி ஷிரடியில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெலுகு சமாக்யா கூட்டம்
0