திருமங்கலம், செப். 2: மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திமுக தலைமையகத்தில். முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மதுரை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், பகுதி உறுப்பினர்களின் கூட்டம் இன்று (செப். 2) துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன்படி இன்று திருமங்கலம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகளின் பொது உறுப்பினர் கூட்டம் செக்கானூரணியில் உசிலை ரோட்டில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. அவனியாபுரம் கிழக்கு பகுதி கூட்டம் மாலை 5.30 மணிக்கு அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற உள்ளது. அவனியாபுரம் மேற்கு பகுதி கூட்டம் அவனியாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதேபோல் திருப்பரங்குன்றம் வடக்கு, தெற்கு பகுதி கூட்டம், கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய கூட்டங்கள் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் சேடபட்டி வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றியம், எழுமலை பேரூர் கூட்டங்கள் நடக்கிறது. செப்.5ம் தேதி செல்லம்பட்டி தெற்கு, திருமங்கலம் தெற்கு ஒன்றிய கூட்டம் நடைபெற உள்ளது. செப்.6ம் தேதி திருமங்கலம் கிழக்கு ஒன்றிய கூட்டம் நடக்கிறது. செப்.10ம் தேதி செல்லம்பட்டி வடக்கு ஒன்றியம், உசிலம்பட்டி நகர், தெற்கு, மேற்கு, வடக்கு ஒன்றியம், திருமங்கலம் நகர் ஆகியவற்றின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.
செப்.11ல் டி.கல்லுப்பட்டி கிழக்கு, வடக்கு ஒன்றியம், பேரூர் கூட்டம் நடக்கிறது. செப். 12ல் டி.கல்லுப்பட்டி தெற்கு, கள்ளிக்குடி தெற்கு, வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்கள் நடைபெறும் நேரம், இடம் குறித்த விபரங்களை தெற்கு மாவட்ட திமுக வெளியிட்டுள்ளது. இதன்படி கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.