கம்பம் ஜூன் 20: கம்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சியில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சியில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. ஆனால் இதில் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் எரியாததால் பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகின்றனர். எனவே உடனடியாக பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.