தர்மபுரி, ஆக.31: இலக்கியம்பட்டி ஊராட்சியில் இலக்கியம்பட்டி, செந்தில் நகர், கருவூல காலனி, கலெக்ட்ரேட், பிடமனேரி, வெண்ணாம்பட்டி, வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குள்ளனூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இலக்கியம்பட்டி ஊராட்சி முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களை துரத்துகிறது. பகல் நேரங்களில் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கூட்டமாக துரத்துகின்றன. கடந்த ஒருவாரமாக செந்தில் நகர் பகுதியில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதோடு, அவ்வழியாக செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில்நகர், பிடமனேரி ஆகிய பகுதிகளில் அதிகரித்து வரும் நாய் தொல்லையில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய்களால் பொதுமக்கள் பீதி
previous post