பாலக்காடு, மே 31: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் காய்ச்சல் உட்பட பல்வேறு தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட மருத்துவ அதிகாரி அறிவுரை வெளியிட்டுள்ளார்.
மழைக்காலங்களில் வீட்டின் சுற்றுப்புறங்களில் தூய்மையாக வைக்க வேண்டும், மழை நீர் தேக்கமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பொருட்கள் மழைநீர் தேக்கமடைந்தால் அவற்றில் கொசுக்கள் முட்டை போட்டு கொசுகள் பரவக்கூடும். இதன் காரணத்தால் டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா, மழைக்காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவக்கூடும்.
குடிநீர் சூடாக்கி ஆற வைத்து குடிக்க வேண்டும், உணவுகள் நல்ல முறையில் சூடாக்கி சாப்பிட வேண்டும், உணவு வகைகள் எந்த நேரத்தில் மூடிய நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம் நோய்த்தடுப்பு ஏற்படுத்த முடியும். வாந்தி பேதி ஏற்பட்டால் உடனடியாக சூடான தண்ணீரில் ஓ.ஆர்.எஸ்., பொடி கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர் தண்ணீர், கஞ்சி தண்ணீர் ஆகியவை நோயாளிகளுக்கு வழங்கி நோய்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியும். விரைவில் நோய் குணமடையும் என டி.எம்.ஓ திவ்யா வழங்கினார். தலைவலி, உடம்பு வலி, கண் சிவப்பு, நெஞ்சரிப்பு, சோர்வு, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களின் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.