திருச்சி, ஜூன் 24: தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்நிறுத்தம் தடைபடும் பகுதிகள்:
தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷாபள்ளிவாசல், பழையகுட்செட்ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில் ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத் சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை மற்றும் கூனிபஜார் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.