க.பரமத்தி, ஆக.3: தென்னிலை அருகே பெண் வார்டு உறுப்பினரது கணவரை தகாத வார்த்தைகளால் பேசி வாய் தகராறு செய்து தாக்கிய வழக்கில் இருவர் மீது தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். க.பரமத்தி அடுத்த தென்னிலை அருகேயுள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் நாகமணி (42). இவரது மனைவி பிந்து (40) இவர் அதே பகுதியில் தற்போது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இதே ஊரை சேர்ந்தவர்கள் தன்ராஜ்(42), செல்வக்குமார்(41) ஆகிய இருவரும் வார்டு உறுப்பினரது கணவரை சந்தித்து தங்கள் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏன் இன்னும் வழங்கவில்லை கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக வார்டு உறப்பினரது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட வார்டு உறப்பினரது கணவர் நாகமணி, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் பாதிக்கப்பட்ட நாகமணி கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.