திருச்சி, செப்.1: ஐந்தாவது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, உடையான்பட்டியில் நேற்று மாலை தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சோி மற்றும் அந்தமான் ஆகிய 6 அணிகள் பங்கேற்று உள்ளன. போட்டிகள் ‘லீக்’ அடிப்படையில் நடைபெறுகிறது.
நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி புதுச்சேரியை எதிர்கொண்டு விளையாடியது. அதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய தமிழக அணி இதில் 11-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் இன்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.