சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் குறித்து சென்னையில் ஆதரவாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கு.ப.கிருஷ்ணன் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியர்களை சந்தித்தனர். அப்போது தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதாக கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்காக அல்ல என்றும் அவர் கூறினார். இரட்டை இலை சின்னம் வெற்றியடைவதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார். பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் விலகியதால் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுவது உறுதியானது. எனவே அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …