வேதாரண்யம்: வரும் 26ம்தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேளாண் விற்பனைக்குழு செயலளர் அழைப்பு விடுத்துள்ளார். வேதாரண்யம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- வேதாரண்யம் வட்டார விவசாயிகள் தங்களது ஆதார், சிட்டா அடங்கல், விஏஓ சான்று, வங்கி கணக்கு புத்தகம், நகல் பெற்று விற்பனை கூடத்தில் பதிவு செய்து விற்பனை செய்ய கேட்டுக்கொள்வதுடன் விற்பனை கூடத்தில் இரண்டு 500 மெட்ரிக் டன் குடோன் உள்ளது.