தென்காசி,நவ.2: தென்காசி மாவட்டத்தில் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி வருகிற 6ம் தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் நான்காம் சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி நவ.6ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு காதுவில்லைகள் அணிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நவ.6ல் வாய்நோய் தடுப்பூசி பணி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தகவல்
129
previous post