தென்காசி,ஆக.6: தென்காசி நகராட்சி 26 வது வார்டு தெற்கு மேலக்கோயிக்கால் தெருவில் ஆழ் துளையுடன் கூடிய குடிநீர் தொட்டியை நகர் மன்ற தலைவர் சாதிர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் மன்ற துணை தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஆணையர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஹஸீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல ஜமாத் தலைவர் செய்யது சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் நாகூர் மீரான், பஷீர், ஹஸீனாபீர், அக்பர், மூஸா, ஜமால் முஹைதீன், முகம்மது மைதீன், ஹாஜிமுஸ்தபா பீர், ஹபீபுல்லா, பீர்முகம்மது, திமுக நகர பொருளாளர் சேக்பரித், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், வேம்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். 26வது வார்டு திமுக செயலாளர் விநாயகமணிகண்டன் நன்றி கூறினார்.