தென்காசி,பிப்.26: தென்காசி அடுத்த இலத்தூர் விலக்கு பகுதியில் கூந்தல் மற்றும் கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தென்னந்தும்பு சேதமடைந்தது. தென்காசியை அடுத்த இலத்துரை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தும்பு தொழிற்சாலை மற்றும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் பல லட்ச ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தென்னந்தும்பு ஆகியவை தீ விபத்தில் சேதம் அடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே கயிறு ஆலையில் பயங்கர தீ விபத்து
0