தென்காசி,ஜூலை 18: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி – குத்துக்கல்வலசை செல்லும் வழியில் ஐடிஐ பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடக்கிறது. எனவே தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் candidate loginல் பதிவு செய்ய வேண்டும். தனியார் துறை நிறுவனங்கள் Employer loginல் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்து தகவலுக்கு சிவபாலன் 9597495097 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தென்காசியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
121
previous post