தென்காசி, பிப்.20: தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தென்காசி கிழக்கு கிளையின் சார்பில் ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. தென்காசி மவுண்ட்ரோடு பகுதியில் நடந்த கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் முகமது சித்திக் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் யாசர்,தென்காசி மாவட்டச் செயலாளர் ஜலாலுதீன் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். மருத்துவ அணி செயலாளர் அப்துல் ஹமீத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிளைத் தலைவர் ராஜாமுகமது, பொருளாளர் பீர்முகமது, துணைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் அபுபக்கர் சித்திக், தொண்டரணி செயலாளர் ஜாபர், மாணவரணி செயலாளர் அன்வர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தென்காசியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை பிரசாரம்
0