சிவகாசி, செப்.11: சிவகாசி அருகே ரிசர்வ்லயன் மரியானுஸ்நகர் தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 53 அடி கொடி மரத்தில் விருதுநகர் மறை வட்ட அதிபர் அருட்பணி அருள்ராயன் அடிகளார் கொடியேற்றினார். கடந்த 4ம் தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி திருப்பலி நடத்தினார். தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கு தந்தை அருட்பணி அற்புதசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை அருட்பணி அற்புதசாமி செய்திருந்தார்.