மதுரை, ஆக. 12: மதுரை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தூய்மை பாரத இயக்கம் பகுதி 2, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி மற்றும் தொடர்பு வேலைக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பதவி எண்ணிக்கை 3. கல்வி தகுதி பி.இ சிவில் இன்ஜினியரிங். திட்டமிடுதல், ஒன்றிணைத்தல் மற்றும் கண்காணித்தல் பதவி 1, கல்வி தகுதி பிடெக், எம்பிஏ, எம்எஸ்சி ஆகும். தகவல் கல்வி மற்றும் தொடர்பு பதவி எண்ணிக்கை 2, இதற்கு கல்வி தகுதி முதுநிலை பட்டப்படிப்பு. விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக https. madurai/nic/in என்ற இணைய தளத்தினை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை கூடுதல் (வ) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி, முகமை, மாவட்ட ஆட்சியரகம், மதுரை- 625002. என்ற முகவரியிலும் வழங்கலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆக.18ம் தேதி ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.