அயோத்தியாப்பட்டணம், நவ.2: அயோத்தியாப்பட்டணம் அருகே டி.பெருமாபாளையம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சங்கர் தலைமை வகித்து பேசினார். இக்கூட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு மன்ற தலைவர் சங்கர் சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசினார். இக்கூட்டத்தில் பல்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.