பாலக்காடு, மார்ச் 1: பாலக்காடு மாவட்டம் முட்டிக்குளங்கரை கூட்டுறவு வங்கி அருகே வசிப்பவர் ரஷீனா. இவரது பிரேஸ்லெட் கடந்த சில நாட்கள் முன்பு வழியில் தவற விட்டார். இவற்றை புதுப்பரியாரம் கிராமப்பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் 17-வது வார்டை சேர்ந்த மாலதி, 20 வது வார்டை சேர்ந்த சுபாஷினி ஆகியோர் கண்டெடுத்ததை பாலக்காடு ஹேமாம்பிகா நகர காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் வைத்து பிரேஸ்லெட்டின் உரிமையாளர் ரஷீனாவிடம் ஒப்படைத்தனர். இதற்காக புதுப்பரியாரம் கிராமப்பஞ்சாயத்து தூய்மை பணியாளர் மாலதி, சுபாஷினி ஆகிய இருவருக்கும் பொது மக்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.