சென்னை: தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து குழந்தைகளும் ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகளாக வளர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம். ஊரக வளர்ச்சி திட்டங்கள் ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தவர் கலைஞர் என முதலமைச்சர் பேசினார். …