காவேரிப்பட்டணம், ஜூன் 27: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் நாம் பெரிதும் மதிக்கக் கூடிய இடத்தில் இருப்பவர்கள். அவர்கள் நலமுடன் இருந்தால் தான் நாம் நோய் நொடியின்றி நலமுடன் வாழ முடியும். எனவே, அவர்களை பாதுகாக்குகின்ற வகையில் தான் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.