திருப்பூர், ஜூன். 29: திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கான பிரிவுஉபசார விழா நடைபெற்றது. கவுன்சிலர் நாகராஜ் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 24வது வார்டில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளர்கள் குமார், சோமசந்தரம், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் 3 பேருக்கும் சக தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் சந்தனமாலை, பட்டாடை, சால்வை, வேட்டி அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உறவினர்கள் சிலர் தூய்மை பணியாளர்களுக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தினர். இந்நிகழ்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னச்சாமி, சக்திவேல், சதாசிவம், பிரபாகரன், சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.