தூத்துக்குடி, ஆக. 27: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரிகள் 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (55), கிருஷ்ணராஜபுரம் சுடலைமணி (40), தாமோதரன் நகர் எட்மண்ட் (52) ஆகிய 3 பேரும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்களை ஏலம் எடுத்துச் சென்று மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மீன்பிடி துறைமுகத்தில் 3 பேரும் மீன்களை ஏலம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தூத்துக்குடி சுந்தரம்மாள்புரத்தைச் சேர்ந்த வினோத் (50) மற்றும் 3 பேர் சேர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டு ஹரிகிருஷ்ணன் உள்பட 3 பேரிடம் தகராறு செய்தனர். மேலும் வினோத் மற்றும் 3 பேரும் சேர்ந்து ஹரிகிருஷ்ணன், சுடலைமணி, எட்மண்ட் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 3 மீன் வியாபாரிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
previous post