தூத்துக்குடி, ஆக 19: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 9 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு தனிதாசில்தாராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன், எட்டயபுரம் தாசில்தாராகவும், எட்டயபுரம் தாசில்தார் டி.ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் தாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் என்.ராமகிருஷ்ணன் கோவில்பட்டி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் முரளிதரன் தூத்துக்குடி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், திருச்செந்தூர் இஸ்ரோ நிலஎடுப்பு அலகு-6 தனிதாசில்தாராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ நிலஎடுப்பு அலகு-6 தனிதாசில்தார் ஆனந்த் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு தனிதாசில்தாராகவும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு தனிதாசில்தார் சுந்தரராகவன், கயத்தார் தாசில்தாராகவும், கயத்தார் தாசில்தார் நாகராஜன், தூத்துக்குடி-மதுரை வழி அருப்புக்கோட்டை அகல ரயில்பாதை திட்ட நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.