Friday, February 23, 2024
Home » தூத்துக்குடி மாவட்டடோல்கேட்களில் 15 நாட்களுக்கு சுங்கவரி வசூலிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டடோல்கேட்களில் 15 நாட்களுக்கு சுங்கவரி வசூலிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

by Suresh

தூத்துக்குடி,டிச.25:தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி ஆகிய பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதுல் கூறி நிவாரணம் வழங்கினார். பின்னர், 3ம் மைல் பகுதியில் உள்ள இந்திய உணவு கழகத்தில் மழையால் சேதமான அரிசி, கோதுமை மூடைகளை நேரில் சென்று பார்வையிட்டார். ன்னர் அவர் கூறுகையில், ‘தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்தோம். மழை, வெள்ளம் பாதிப்படைந்து 8 நாள் ஆகிறது. சில இடங்களில் மழை நீர் வடியாமல் உள்ளது. மக்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

மழை, வெள்ளம் பாதிப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மத்திய அரசை பொறுத்தவரை மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் நடந்த இந்த வெள்ள பாதிப்பு வேதனையளிக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அதிக வெள்ள பாதிப்பில் உள்ளன. இதில் விளிம்பு நிலை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும். மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் தங்க முடியாமல் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எனவே, 15 நாள்களுக்கு புதுக்கோட்டை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் பணம் வசூலிக்கப்பட கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டி மற்றும் ஆய்வின் போது தமாகா மாவட்ட தலைவர்கள் எஸ்டிஆர் விஜயசீலன், கதிர்வேல் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

You may also like

Leave a Comment

8 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi