தூத்துக்குடி, செப். 9: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் மேலூரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் முறையே மாவட்ட கனிமவள நிதி சார்பில் ரூ.69 லட்சம் மற்றும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற அடிப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சிவந்தாகுளம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்பி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர்கள் பாப்பாத்தி, முத்துமாரி, சந்திரபோஸ், இசக்கிராஜா, பொன்னப்பன், விஜயலட்சுமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், திமுக வட்ட செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியை எமல்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் முனியசாமி நன்றி கூறினார்.