தூத்துக்குடி, மே 12:தூத்துக்குடி சிவன் கோவில் பெரிய தேருக்கு புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்பதற்கான பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்படுகிறது. இதற்கான பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, திருக்கோவில் தலைமை அச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.