தூத்துக்குடி, ஆக. 21: தூத்துக்குடி சிஜிஇ காலனியில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், தார்சாலை, பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்த மேயர், ஆணையர் ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் சாலையில் உள்ள சிஜிஇ காலனி பகுதியில் நடைபெறும் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவர் பாலகுருசுவாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், கவுன்சிலர் வைதேகி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி சிஜிஇ காலனியில் புதிய தார் சாலை, வடிகால் பணி
previous post