தூத்துக்குடி,ஜூன் 1: புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களை கணக்கிட்டு அவர்களுக்கு விரைவில் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாக தூத்துக்குடியில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் போல்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சி அமைந்தபின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.ஆயிரம், பள்ளி சிறுவார் சிறுமியர்களுக்கு காலை உணவு திட்டம், திறன்மேம்பாட்டு பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி என்று ஒவ்வொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைக்கு வந்த பின்பும் மக்களை சென்றடைகிறதா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதற்கென்று ஒரு தனி அதிகாரியையும் நியமித்து கண்காணித்து வருகிறார். இப்படி எல்லா மக்களும் நன்மையடைய வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அது மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஊக்கம் அளித்து வருகிறார்.
தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்தது. இதனை தீர்க்கும் வகையில் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களை கணக்கிடப்பட்டு நீர்நிலைகள் தவிர்த்த இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது. இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் திமுக ஆட்சியில் பலனடைந்துள்ளனர். இதை நாம் ஞாபகபடுத்தும் வகையில் திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு குடும்ப உறுப்பினா்களிடம் கொண்டு போய் சோ்க்க வேண்டும். 2026ல் முதல்வரின் இலக்கான 200 தொகுதிகளை தாண்டி நாம் வெற்றி பெற்றாக வேண்டும்’’என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, சார்பு அணிகளின் மாவட்டத் தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், அணி துணை அமைப்பாளர்கள் நைஸ் பரமசிவம், வக்கீல்கள் ரெக்ஸ், செல்வலட்சுமி, மணி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் மார்க்கின் ராபர்ட், சூர்யா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், கண்ணன், ராமா், இசக்கிராஜா, கனகராஜ், அதிஷ்டமணி, சோமசுந்தரி, வட்டச்செயலாளர்கள் மந்திரகுமார், செந்தில்குமார், பத்மாவதி, பொன்னுச்சாமி, பாலகுருசாமி, பொன்பெருமாள், முன்னாள் கவுன்சிலர் அந்தோனிராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.