தூத்துக்குடி, மே 25:தூத்துக்குடி கேடிசி நகர் வரசித்தி விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு கேடிசி நகரில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தின் 17ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் விக்னேஷ்வர் பூஜை, கலச பூஜை, யாக வேள்வி பூர்ணாகுதி, வஸ்திராகுதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானத்தை 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரவில் மீனாட்சி அம்பிகை சமேத சொக்கநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சண்முகையா, ராஜகுமாரசாமி, செல்வராஜ், பெருமாள், ராஜாமணி, சிவசாமி, பால்ராஜ், ராஜன், ரத்தினவேல், சங்கர், சேர்மபாஸ்கர், வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கேடிசிநகர் வரசித்தி விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழா
0